சிறுநீரக கடத்தல் தொடர்பில் பணிப்பாளர் நாயகத்திடம் வாக்குமூலம் பதிவு




சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவிடம், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் பலரிடமிருந்து தகவல்களை திரட்டும் நோக்கில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுநீரக கடத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், பொலிஸ் மா அதிபரிடம் கோரிககை விடுக்கப்பட்டது.

இதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரினால், மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

இதற்கமைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சரிடம் அண்மையில் கையளிக்கப்பட்டிருந்தது.