விஜயவை நினைவு கூருவதற்கு மகிந்தவிற்குத் தகுதியில்லை




விஜயவை நினைவு கூற மகிந்தவுக்கு எவ்வித தகுதியும் கிடையாது என முன்னாள்  ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று அவரது பிறந்த இடமான சீதுவையில் அனுஷ்டிக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க, ஜீவன் குமாரதுங்க, பேராசிரியர் காலோ பொன்சேகா ஆகியோர் விஜயவின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் விஜயகுமாரதுங்கவின் ஞாபகார்த்த வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது குறித்து ஊடகவியலாளர்  சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குஅவர் பதிலளிக்கையில்,
'விஜயவை நினைவு கூருவதற்கு மகிந்தவுக்கு எதுவித தகுதியும் கிடையாது. அவர் உயிருடன் இருக்கும் வரை மகிந்த அவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் தான் இருந்தார். 

அத்துடன், விஜயகுமாரதுங்க ஒரு மனிதநேயவாதி. மகிந்தவை விட முற்றிலும் மாறுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயவாதியை நினைவுகூற மகிந்த எந்த வகையிலும் தகுதியானவர் இல்லை. ஏனெனில் மனித நேயம் என்றால் என்னவென்றே மஹிந்தவுக்குத் தெரியாது' என்று சந்திரிக்கா குமாரதுங்க  மேலும் தெரிவித்தார்.