ஜேர்மனி மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மனி நோக்கி சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நேரப்படி இன்று காலை டெகல் (Tegal) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, ஜேர்மனியின் பிரதான கூட்டணி அதிகாரி ஜர்கன் கிரிஸசடியன் மெதர்ன்ஸ் (Jurgen Christian Mertens) மற்றும் ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம ஆகியோர் வரவேற்றனர்.
அத்துடன் ஜனாதிபதி தங்கியுள்ள ஹோட்டலில் விஷேட வரவேற்பு நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

