அடுத்த வாரமளவில் சர்வதேச நாணய நிதியத்தின் சட்ட ஆய்வு மற்றும் கணக்கீட்டு அதிகாரிகள் அடங்கிய விசேட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 250 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வேலைத்திட்டங்களுக்காக அனுமதி திறைசேரியிடம் இருந்தும் உரிய கட்டமைப்பிலிருந்தும் பெறப்படாமல் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் இது குறித்து ஆராய்ந்து தற்போதைய அரசாங்கத்திடம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது.
பணச்சலவை சட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விஜயம் மஹிந்தவிற்கு பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளது.
இவர்களின் இந்த விஜயத்தின் நிறைவில் வெளியிடப்படவுள்ள அறிக்கையினைத தொடர்ந்து மஹிந்த குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊழல் மோசடிகள் தொடர்பில் மஹிந்தவின் குடும்பத்தனருக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையிலேயே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
