கடந்த ஆட்சிக் காலத்தில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளில் 88609 பேர், பொருத்தமற்ற துறைகளில் பணியாற்றி வருவதாகவும், இதனால், அவர்கள் மூலம் நாட்டுக்கு உரிய சேவை பெற்றுக்கொள்ளப்படாதுள்ளதாகவும் தொழில்புரியும் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த பட்டதாரிகளை அரசாங்கம் பொருத்தமான துறையில் இணைக்க நடவடிக்கை எடுக்காவிடின், இவர்களிடமிருந்து நாட்டுக்கு வினைத்திறன் மிக்க சேவையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்பொழுதுவரை இலங்கையில் அரச சேவை ஊழியர்கள் மாத்திரம் 13 லட்சத்து 2 ஆயிரத்து 258 பேர் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

