மின்னஞ்சலின், பிதா மகன் ராய் டாம்லின்சன், காலமானார்.



ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வலையமைப்பினூடாக தகவல் அனுப்பும் யோசனையை, 1971ஆம் ஆண்டு இவர் முன்வைத்தார்.
அமெரிக்க பாஸ்டனில் கம்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றியபோது, முதலாவாது நவீன மின்னஞ்சலையும் அவர் எழுதினார்.
இன்று அனைத்து மின்னஞ்சல் முகவரிக்கு பயன்படுத்தப்படும் "@" குறியீடு பயன்பாட்டுக்கும், அவரே முன்னோடியாக இருக்கிறார்.
ஆனால் தனது முதலாவது மின்னஞ்சலில் என்ன எழுதப்பட்டது என்பது, தனக்கு நினைவில் இல்லை என டாம்லின்சன் தெரிவித்திருந்தார்.
அது முழுமையாக மறக்கக்கூடிய விஷயம் எனவும் அவர் விபரித்திருந்தார்.