மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்



மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து கல்லடி பாலத்திற்கு அருகில்,நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளின் சாரதிகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்