க.கிஷாந்தன்)
23.02.2016 அன்று பஸ் விபத்து ஒன்றில் பலியான நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ கல்லூரி மாணவன் தொடர்பான வழக்கு விசாரணை 02.03.2016 அன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் சந்தேக நபராக பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். சந்தேக நபரை நீதிமன்ற நீதவான் ஐ.ஆர்.டீ இந்திக்க முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபர்க்கு ஒன்றரை இலட்சம் ரூபா சரீர பிணையும், பத்தாயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலும் ஒரு வழக்கு விசாரணை இம்மாதம் 20ம் திகதி நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

