அரச காரியாலயங்கள் திடீர் சுற்றிவளைப்பு – அமைச்சு நடவடிக்கை



அரச நிறுவனங்களில் கடமை நேரத்தில் காரியாலயத்தில் இருக்காமல் வெளியே செல்பவர்களை கண்டறிவதற்கு சிறப்பு சுற்றிவளைப்புப் பிரிவொன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கு சில அரச உத்தியோகத்தர்களின் ஒழுங்கீனமான செயற்பாடு தடையாகவுள்ளதாகவும், இதற்கான ஒரு நடவடிக்கையாகவே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அரச நிருவாக முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரச நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை, காரியாலயத்திலிருந்து நேரகாலத்துடன் வெளியேறுவதாகவும், திங்கட்கிழமை தாமதமாகி வருகை தருவதாகவும் முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளன.
இந்த நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 13 பேருக்கு ஒருவர் அரச ஊழியராக உள்ளார். இவர்களிடம் மக்களுக்கான சேவை சரியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.