சிறைச்சாலை பஸ் துப்பாக்கிப்பிரயோக விசாரணைகள் ஆரம்பம்



பாதாள குழுவொன்றின் தலைவர் என கூறப்படும் தெமொட்டகொட சமிந்த எனப்படும் சமிந்த ஜயநாத் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சந்தேக நபர்களை கொண்டு செல்லும் போது போதியளவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசாந் தனசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான விசாரணை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்ற நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்ற வீதியில் இரத்தக்கறைகள் படிந்துள்ளதாகவும், இதனை அடிப்படையாக கொண்டு அவர் மீது துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணைக்கு தெமட்டகொட சமிந்தவை சிறைச்சாலைகள் பஸ்ஸுல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் திரும்புச் சென்ற போது நேற்று பிற்பகல் இந்த துப்பாக்கு பிரயோகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.