இன்று முதல் மகளீர் தின நிகழ்வுகள்




இன்றுமுதல் மலையகமெங்கும் மகளிர்தினநிகழ்வுகள்:

 (காரைதீவு  நிருபர் சகா)

மனித அபிவிருத்தி தாபனமும், பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியும் இணைந்து இம்முறை பெண்கள் தினத்தை கண்டி, நுவரெலியா, அம்பாறை மாவட்டங்களில் வெகுவிமரிசையாக நடாத்த ஏற்பாடு செய்துள்ளது என பணிப்பாளர்நாயகம் பி.பி.சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
இன்று முதல் மலையகத்தில் மகளிர்தின நிகழ்வுகள்!
இன்று   மார்ச் 7 ஆம் திகதி  திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட உதவி செயலாளரும் ஒருங்கிணைப்பாளரும் கண்டி மாவட்ட லக்வனிதா அமைப்பின் தலைவியுமான சாந்தினி கோங்காகே அவர்களுடன் கண்டியில் நடாத்தவுள்ளது.       
நாளைமகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதி கண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும்   மார்ச் 10 ஆம் திகதி நுவரெலியா மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் விரன்ஞன் டயஸ் சுமணசேகரவின் ஏற்பாட்டிலும்  நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் பெண்களுக்கு சிறப்புஏற்பாடு வேண்டும்!
பெண் வேட்பாளர்கள் தேர்தல் போட்டியிழுவதற்கு அரசு ஒரு குறிப்பிட்டளவு நிதி வழங்;க வேண்டும். தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்களுக்கு சிறப்பு விடுமுறை அழிக்கப்பட வேண்டும்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தி தாபனமும், பெண்கள் ஒத்துழைப்பு முன்னணியும் இணைந்து மேற்படி கோரிக்கையை இம்முறை முன்வைத்துள்ளது.
மேலும் தெரிவிக்கையில்:
சமுகமாற்றத்திலும், பெண்கள் அபிவிருத்தியிலும் உண்மையான ஈடுபாடும் அக்கரையும் கொண்டிருக்கும் தனி நபர்கள் அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய சில விடயங்கள் உள்ளன அவையாவன.
தங்கள் கட்சிகளிலும்; பதவிகளிலும், பொறுப்புகளிலும், கணிசமான அளவு பெண்கள் இடம் பெற ஊக்குவிக்க வேண்டும்.. அரசியல் ரீதியான விழிப்புணர்வு, இலங்கை சட்டம் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படுவதினுடாக பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும், பிரதேச சபைகளிலும் தமது பிரதிநிதித்துவத்தை ஒழுங்கான முறையில் செயல்பட பெண்களுக்கு உதவும்..பெண்களுக்கெதிரான கருத்துக்களை கூறும் கட்சி உறுப்பினர்கள் பொறுப்பானவர்கள்  மீது அரசியல் கட்சிகள் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.