ஐ.தே.க. யின் மே தினத்தில் 4 லட்சம் ஆதரவாளர்கள்



ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடாத்தவுள்ள மே தினக் கூட்டத்துக்கு கட்சியின் ஆதரவாளர்கள் 4 லட்சம் பேரை ஒன்று திரட்டுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் எதிர்க் கட்சித் தலைவர் மஞ்ஜு ஸ்ரீ அரங்கல தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதியிலிருந்து குறைந்தது 1500 பேரை கலந்துகொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தொகுதி அமைப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் அமைப்பாளருடைய நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.