திருகோணமலை சாம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படும் அனல் மின் நிலையத்துக்கு 818 ஏக்கர் காணி வழங்கும் திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, சாம்பூர் மக்கள் இழந்த காணிகள் மற்றும் அரசு கையகப்படுத்திய காணிகள் தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வடகிழக்கு பகுதிகளில் காணிகள் கையகப்படுத்தும் போது எல்லா அரசும் எதேச்சாதிகாரமாகவே செயற்பட்டதாகவும் இந்த முறையை தடுப்பதற்கான நேரம் வந்துள்ளது என திர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

