பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவை எதற்காக சீனாவிற்கு அழைத்து சென்றார் என்பத பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சீனாவுக்கான விஜயத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மனக்காயங்களை ஆற்றும் வகையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்யின் அண்மைய செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த பல பதவிகள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
கட்சியில் பலரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீண்டும் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமே வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கட்சியின் துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
கட்சியில் அவருக்கு இருந்த பதவி பறிபோயுள்ளதுடன், புதிதாக அவருக்கு எந்தவித பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் சீனாவுக்கான தனது விஜயத்தின் போது அமைச்சர் சஜித்தையும் உடன் அழைத்துச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு வைத்து சீன அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் சஜித்தை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் என்று அவர் சஜித் பிரேமதாசவை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக கட்சிப் பதவியும் அதிகாரமும் பறிபோன கவலையில் இருந்த சஜித் பிரேமதாசவின் மனக்காயம் வெகுவாக ஆறியுள்ளது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவே தன்னை முதன்முதலாக சீனாவுக்கு அழைத்து வந்ததாக குறிப்பிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நன்றியறிதலை தெரிவித்த போது சஜித் பிரேமதாசவின் மனக்காயம் முற்றாகவே ஆறிப் போனதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

