நியூசிலாந்தில் உள்ள ஹொட்டல் துறையில் தொழில் பெற்று தருவதாக கூறி இணையத்தளம் ஒன்றில் விளம்பரம் செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா - நெலும் மாவத்தை பிரதேசத்தில் இன்று இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபரின் இல்லத்தில் இருந்த 26 கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.