முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பில் சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.