“சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்“



(க.கிஷாந்தன்)

“சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்“ என்ற நூலின் அறிமுக விழா 10.04.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நூலினை ஸ்ரீலங்காவில் பிறந்து தமிழகத்தில் குடியேறிய மு.சி.கந்தையா எழுதியுள்ளதோடு, முதல் பிரதியை புரவலர் காசிம் உமர் பெற்றுக்கொண்டார்.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மலையகத் தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள், அடக்குமுறைகள், இலங்கை அரசாங்கங்களின் சட்டங்கள், ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன.

மேலும், 1850களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு வாழ்வைத் தேடிச் செல்ல நேர்ந்தமை குறிப்பாக மலையகத் தொழிற்சங்கள் இழைத்த துரோகங்கள் போன்ற விடயங்கள் இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.  

சிதைக்கப்பட்ட 50 ஆண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளதோடு, இந்நூலின் மூலம் மலையகத் தமிழரின் வரலாறு, 1817 - 1920 (முதல் பகுதி) 1917 - 1920 (இரண்டாம் பகுதி) 1970 - 2015 (மூன்றாம் பகுதி) என மூன்றாக பிரித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் பற்றிய ஆய்வுரையை ஆய்வாளர் மதிசூதனன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது