ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும், ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரஜைகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பாதுகாப்புக்கெனவுள்ள ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு என்ன செய்துகொண்டிருக்கின்றது எனவும் இவர் இதன்போது கேள்வி எழுப்பினார். இதற்கு முன்னரும் பல தடவைகள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
குருநாகலை நிகழ்வொன்றில் ஜனாதிபதி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன்போது, மது போதையில் இருந்த இருவர் ஜனாதிபதியின் அருகில் சுற்றித்திரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது நல்ல ஒரு நிலைமையல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்

