ஐ.நா. விசேட பிரதிநிதிகள் இருவர் இலங்கை விஜயம்



ஐக்கிய நாடுகள் அமைப்பின் நீதிமன்ற சுயாதீன நடவடிக்கைகள் தொடர்பான விசேட பிரதிநிதிகள் இருவர் இன்று அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வருகை தரவுள்ளதாக ஐ.நா. வுக்கான இலங்கை செயலகம் அறிவித்துள்ளது.
நீதிமன்ற சுயாதீன நடவடிக்கைகள் தொடர்பான விசேட பிரதிநிதி மொனிகா பின்தோ மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான விசேட பிரதிநிதி ஹுவான் ஈ மென்தெஸ் ஆகியோரே இவ்வாறு வருகை தரவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் மே 07 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள் எனவும், இதன்போது, அமைச்சர்கள், அரச அதிகாரிகள், நீதிபதிகள், சட்ட மா அதிபர், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.