அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை வழங்காது விடின், நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் உண்மையான செயற்பாடுகள் சென்றடையாது என அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருநாதிலக்கவிடம் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேரரைச் சந்திந்து நல்லாசி பெறுவதற்கு சென்ற வேளையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். தேரருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி, சுதந்திரமான முறையில் கருத்துத் தெரிவிக்கும் வகையில் ஊடகங்களின் சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படும். இதற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அரச ஊடகங்களுக்கும் சமநிலையைப் பேணுமாறு நாம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

