நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குவின் தகவல்கள் அடங்கிய கையேடு இன்று வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இம்முறை பல்கலைக்கழக வழிகாட்டிப் புத்தகம் மிக இலகு நடையில் வெளிவந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டிலுள்ள 15 பல்கலைக்கழங்கள் மற்றும் 18 உயர் கல்வி நிறுவனங்கள் என்பவற்றுக்கு இம்முறை 27250 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 வீத அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

