சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகள் 50 பேரை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணைகளை துரிதபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இணைத்துக் கொள்ப்படவுள்ளவர்களில் 30 சிரேஷ்ட சட்டத்தரணிகள் தற்போது தெரிவு செயய்ப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய இருபது பேரை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றங்களுக்கான சட்ட ஆலோசனை வழங்கள் மற்றும் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பில் தற்போது பாரிய குற்றச்சாட்டுக் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் நோக்கில் திணைக்களத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணிகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்

