நாட்டில் மிருக வதை பல்வேறு வகையில் நடைபெற்ற வருகின்றது. மாடுகளை அறுப்பதற்கு அனுமதிப் பத்திரமும் வழங்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்கையில், ஒரு மணி நேரம் நடைபெறும் பாரம்பரிய மாட்டு வண்டி ஓட்டத்துக்கு மாத்திரம் மிருக வதை எனத் தெரிவித்து அரசாங்கம் தடை விதிப்பது நியாயமற்றது என மாட்டு வண்டி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
இம்முறை புத்தாண்டு தினங்களில் அரசாங்கம் மாட்டு வண்டிப் போட்டிகளை கூடாது என தடைவிதித்திருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மாட்டு வண்டி உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயெ இவ்வாறு கூறினர்.
இவ்வாரான தடைகளினால் நாட்டில் பாரம்பரியமாக இடம்பெற்று வரும் மாட்டு வண்டிப் போட்டி நடைபெறாமல் விடுகின்றது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளும் இறைச்சிக் கடைகளுக்கு அறுப்பதற்கே பயன்படுத்தப்படும் நிலைமை உருவாகும் எனவும் அந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

