உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியது!



இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தியே, ஹிங்குராக்கொட பிரதேசத்தில் வைத்து,விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமானப்படைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று கடற்படையின் பேச்சாளர் குரூப் கெப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்தார்.
குறித்த உலங்குவானூர்தியை தரையிறக்க முற்பட்ட போதே இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.