விமல் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவிப்பு



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமயிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தலைமைத்துவத்திலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கப் போவதில்லை எனவும் விமல் வீரவங்ச பாராளுமன்றில் நேற்று அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்த போதிலும் இதுவரையில் தமது கட்சி உறுப்பினர்களுக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
தமது கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது அறிவித்துள்ளார்.