(Mohamed Asmy)
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று இளைஞர்கள் மரணம்.
இன்று மாலை மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ரிதிதென்னை பகுதியில் எதிர் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஜெயந்தியாய பகுதியை சேர்ந்த 3 முஸ்லிம் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன்.)
ஜெயந்தியாய பகுதியை சேர்ந்த நிஸ்பாக் (19வயது)
கஸ்மீர்-(16வயது)
இம்தாத்(17வயது)
ஆகியோரே விபத்தில் உயிரிழந்தவர்களாவார்கள்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தோரின் ஜனாஷாக்கள் தற்போது வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது. நாளை பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
தலா 2பேர் வீதம் எதிர் எதிராக பயணத்தை ஆரம்பித்த இவர்கள் ஒரு இடத்தில் சந்தித்த வேளை வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் உறவினர்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் உதவி:பஸாம் ஹாபிஸ்
அன்பின் சகோதரர்களே மித மிஞ்சிய வேகம் இன்று மூன்று இளைஞர்களின் உயிரை காவு கொண்டுள்ளது.
சிந்தியுங்கள் வேகமாக ஓடும் ஒவ்வொரு தருணமும் உங்களைப்பற்றியும் உங்கள் எதிரில் வருபவர்கள் பற்றியும் அனைவரின் குடும்பங்களை பற்றியும் சிந்தித்து பாருங்கள்....

