வவுனியாவில் இன்று (29.06.2016) மதியம் முச்சக்கரவண்டி தீக்கிரையானதால் முச்சக்கரவண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியின் மதகொன்றில் முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டினை இழந்து மோதி விபத்துக்குளாகியதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமுற்ற முச்சக்கரவண்டியில் சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் முச்சக்கரவண்டியில் சாரதியைத் தவிர வேறு யாரும் பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

