கொழும்பு மேலதிக நீதவான் பிணையில்



சட்டவிரோதமாக யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டிருந்த கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
திலின கமகே தனது சட்டத்தரணிகளுடன் கங்கொடவில நீதிமன்றில் ஆஜராகியதுடன் கங்கொடவில நீதவான் கனிஷ்க விஜேரத்ன அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
5 லட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 25 லட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகள் அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.