(க.கிஷாந்தன்)
நுவரெலியா SCIENCE ACADEMY, நுவரெலியா கல்வி வலயம் மற்றும் நுவரெலியா இந்து கலாசார பேரவை ஆகியவற்றுடன் இணைந்து நடாத்தும் க.பொ.த உயர்தர கலை, வணிக மற்றும் தொழினுட்ப பிரிவு மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு 29.06.2016 அன்று நுவரெலியா மாநகர சபை நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த இலவச கல்விக் கருத்தரங்கு 29.06.2016 அன்று முதல் ஜுலை மாதம் 15 ம் திகதி வெள்ளிக்கிழமை கிழமை வரை காலை 8.30 மணி முதல் மாலை 3.30 வரை நுவரெலியா மாநகர சபை நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்செயலமர்வு சிறந்த விரிவுரையாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளதால் நுவரெலியா மற்றும் இராகலை, கொத்மலை பிரதேச மாணவர்கள் இச்செயலமர்வில் பங்கு பற்றி பயனடையுமாறு ஏற்பாட்டளர்கள் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தொடர்புகளுக்கு : லோகேஸ்வரன் 071-2191999, 076-7391999
