அதாவுல்லா அவுட். பவுசி இன்



நான் இராஜினாமா செய்வதாக ஊடகங்களில் வெளியான செய்தியை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் பெளஷி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நான் பதவியை இராஜினாமா செய்து எனது பதவியை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு வழங்கவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிருந்தது.  இது உண்மைக்குப் புறம்பான செய்தி அவ்வாறு எதுவும் நடக்காது அப்படியான எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனத் தெரிவித்தார். 

அதாவுல்லாஹ்

மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கி, தேசியப் பட்டியலில் நாடளுமன்றம் நுழைந்து, பிரதி அமைச்சர், அமைச்சர் எனப் பல படிகள் கண்டவர். தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர். 2000 முதல் 2014 வரையிலும் அரசியலில் தவிர்க்க முடியாத காதாபாத்திரம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு வெற்றி நிச்சயம் என்றும், அவர் 20 இலட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவார் என்று ஆருடம் கூறிய அதாவுல்லாஹ் மைத்திரியின் வருகையுடன் அக்கரைப்பற்றுக்கு வராமல் கொழும்பில் தஞ்சமடைந்தார்.

சில மாதங்கள் கடந்து அக்கரைப்பற்றுக்கு வந்த அவர், ”தான் தோற்கவில்லை மக்கள் தோற்றுள்ளனர்” என மார் தட்டிப் பேசியதுடன் ரணிலுக்கு பிரதமர் பதவி என்பது பகற்கனவெனவும் சூளுரைத்ததார்.

2015 பாராமன்றத் தேர்தலிலும் வெற்றிலையில் போட்டியிட்டு தனது அங்கத்துவத்தினை மீளத் தக்கவைக்கும் முயற்ச்சியில் களமிறங்கிய அவருக்கு திகாமடுல்ல மக்கள் பதினையாயிரம் வாக்குகள் மாத்திரம் வழங்கிய மரண அடியுடன் கொழும்புக்குச் சென்றவர், அக்கரைப்பற்றில் சொந்த மருமகனின் தந்தை (குர்சித்) இன் தந்தை மரண வீட்டுக்கும் வராமல் கொழும்பில் வாழ்ந்திருந்தார்.

ஆண்டொன்று கழியும் தருணத்தில் வந்து பழைய உறவுகளைப் புதுப்பிக்கத் துவங்கினார். மஹிந்தவுடன் உறவு தொடருமாக இருந்தால் அது அதாவுல்லாவின் அரசியல் அஸ்தமனத்தைக் கொண்டு செல்லும் என ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

2016 மே தினத்தில் மைத்திரியுடன் இணைந்தார். ஏதாவது துரும்புச் சிட்டு கிடைக்குமென காத்திருந்த வேளை, ஜனாதிபதி மைத்திரிக்கு ஏனைய கட்சிகளை இணைத்து தனது கட்சியினைப் பலப்படுத்தவேண்டிய தேவை. ஏனைய கட்சிகளுடன் இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்திருந்தார்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கும்,முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அது அவரைத் தேசியப் பட்டியல் மூலமோ அல்லது வேறேதேனும் மாரக்கங்களினுாடகவேனும் அதிகார பலத்தினை வழங்கலாம்.

கடந்த காலத்தவறுகளை சமரசப் படுத்துவதை விடவும், திருத்திக் கொள்ள வேண்டிய, சுய விமர்சனம் செய்ய வேண்டிய  தேவைப்பாடு அதாவுல்லாவுக்கு அவசியமாகிறது.

அபிவிருத்தி அரசியலில் அவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தாலும், தனது சமூகஞ்சார்  அரசியல் இருப்புக்கு  அவர் பணிபுரியவில்லை. மரணம் வரைக்கும் மஹிந்த என்ற கோட்பாடு, முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக எத்தனை எறிகணைகளை ஏவினாலும், அதனை நியாயப்படுத்தியதன் விளைவு, அவர் நிர்க்கதிக்குள்ளாக்கியது.  

தேசிய காங்கரஸின் ஏனைய அங்கத்தவர்களை அதிகாரங்களை வழங்காது, தனது மகனையும், குடும்பத்தினையும் முன்னுரிமைப் படுத்தியது, வெளிக் கிராமங்களில் தேசிய காங்கிரஸினை தேய வைத்தது.

மாற்று அரசியல் கட்சிகளை தன்னை விமர்சிப்பவர்களை அடியாட்களை வைத்து அடக்கும்  அரக்க குணம் அரசியல்அழிவுக்கு இட்டுச் சென்றது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த  ரணில் விக்ரமசிங்க அக்கரைப்பற்றுக்கு வந்த போது, தனது மாநகர சபையினைக் கொண்டு மின்சாரத்தினை நிறுத்தியதுடன், மாநகர உறுப்பினர்களையும், அடியாட்களையும் அனுப்பி கல்லெறிய வைத்தது ஒரு கசகரணமாயிற்று.

அக்கரைப்பற்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கு  பேனாவால் எழுதும் கையினை வெட்டுவோம் என்றும், மௌலவி ஒருவர் குத்பாப் பேருரையினை நிறைவு செய்தவேளையில், மற்றுமொரு அடியாளை அனுப்பி அவரைத் துரத்தியதும் துாரநோக்கற்ற செயல்.

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என விதன்டாவாதம் தொடர்ந்தும் செய்ததால், செய்வதறியாது தடுமாறினார்.

குறித்த சில பரிவாரங்களை வைத்துக் கொண்டு, அவர்கள் போட்டுக் கொடுப்பதற்குத் தலை சாய்த்ததன் விளைவு அவரை அரசியல் அரங்கில் இருந்து அகற்றியதற்கு மற்றுமொரு காரணம்.

தோல்விக்கு பின்னரும் பௌசியின் தேசியப் பட்டியல் அதாவுல்லாவுக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில் நேற்றுப் பட்டாசு கொளுத்தி பக்கத்துக் கடைக்காரருக்கு வீசியதும் விசமத்தனம்.இவற்றையெல்லாம், தனது ஆதரவாளர்கள் செய்தார்கள்  என்று அதாவுல்லா  நியாயப்படுத்தினால் அது அவரது எதிர்கால அரசியலின் அஸ்திரத்தைக் கேள்விக் குறியாக்கும்.

ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தார் என்பதற்காக,அவர் சொல்லுவதற்கெல்லாம்  தலையாட்ட வேண்டிய கட்டாயத் தேவை, இனி மேலும் இவருக்குத் தேவையில்லை.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை தனது தாரக மந்திரமாகக் கொள்ளும் அதாவுல்லாஹ் வெ்ற்றிபெறலாம். ஆனால், அது நகரும் வரை கடிகார முள் வேகமாக இருக்கும்.