திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கிண்ணியா புள்ளகுழிமணல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீத் ரகீப் (வயது 36) என்பவரே பலியாகியுள்ளார்.
நேற்று புதன்கிழமை (29) இரவு கிண்ணியா மணியரசன்குளத்தில் மீன் பிடித்து விட்டு வீட்டுக்கு வரும் போதே யானை தாக்கியுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.