இலங்கை அகதிகள் கரையிறங்குவதற்கு தற்காலிக அனுமதி!



இந்தோனேஷிய அச்சே பகுதியில் நிர்கதியாகியுள்ள 44 இலங்கை அகதிகளையும் தற்காலிகமாக கரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படகில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.