மற்றுமொரு தொகுதி உதவி பொருட்களை பங்களாதேஷ் அனுப்பியுள்ளது!



இலங்கையில் அனரத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் ஒரு தொகுதி உதவி பொருட்களை பங்களாதேஷ் அனுப்பி வைத்துள்ளது.
பங்களாதேஷ் கடற்படைக்கு செந்தமான ”பி.என்.எஸ் பங்கபந்து“ என்ற கப்பலின் மூலம் இந்த உதவிப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் சிட்டகொங் கடற்படை தளத்திலிருந்து பயணித்துள்ள குறித்த கப்பல் எதிர்வரும் ஐந்தாம் திகதி கொழும்பு துறைமுகத்தினை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காப்பு மருந்துகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், குடிநீர், கூடாரங்கள், உணவுப் பொருட்கள், மின்பிறப்பாக்கிகள் என சுமார் 105 தொன் எடையுடைய உதவிப் பொருட்கள் இவ்வாறு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த 27ம் திகதி பங்களாதேஷ் விமானப் படையினர் முதல்கட்ட உதவிப் பொருட்களை கொழும்புக்கு ஏற்றி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.