பெற்றோரை தேடும் சிறுவன்



(TamilWin)
கொழும்பில் வழிதவறிய நிலையில் தெருவில் நின்ற ஒரு சிறுவனை பொலிஸார் மீட்டு அனாதை இல்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
புவலோஜன் என்ற சிறுவன் இன்று மதியம் கொழுப்பில் வழிதவறி நடமாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதை அவதானித்துள்ள பொலிஸார் சிறுவனை மீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுடன் மாகொல முஸ்லிம் அனாதையில்லத்தில் தங்க வைத்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தந்தையின் பெயர் புண்ணியசீலன் எனவும் தாயின் பெயர் குணவதி எனவும் சகோதரியின் பெயர் கலா எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சிறுவன் மோதரை - இப்பாவத்தயில் வசிப்பதாகவும் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
குறித்த சிறுவன் பற்றிய விபரம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, குழந்தையைப் பெற்றோருடன் சேர்ப்பதற்கு உதவ வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.