16 அத்தியவசிய பொருட்களுக்கு விதித்த கட்டுப்பாட்டு விலை தற்பொழுது நடைமுறையில் இருக்க வேண்டி இருந்தாலும் அந்த விலைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையில் தரம் குறைவான பொருட்கள் சந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக அவ்வியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் அரசினால் 100 நாள் வேலைத்திட்டத்தின் பொது வழங்கப்பட்ட சலுகைகளும் செயற்படுத்தப்படவில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.

