பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.
பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்த விஜயத்தில் பிரதமருடன் சென்றுள்ளார். நாளையும் (18) நாளை மறுதினமும் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தெற்காசியாவின் புலம்பெயர்ந்தவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, சிங்கப்பூர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

