#வங்கதேசம்: பணயக்கைதிகளை சிறைபிடித்த துப்பாக்கிதாரிகள்



வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் துப்பாக்கிதாரிகள் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருப்பதாக அந்நாட்டின் சிறப்புக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்களில் சில வெளிநாட்டவரும் இருக்கலாம் என்று அச்சம்.
முன்னதாக அந்த கஃபேயில் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு நடப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.
நகரின் புறநகரான குல்ஷானில் கடுமையான துப்பாக்கி சண்டை ஒலியை தாம் கேட்டதாக உள்ளூர் மக்களை ஆதாரம் காட்டி உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
போலிஸார் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து, தடுத்துள்ளனர். குறைந்தபட்சம் 3 பேராவது அதில் காயமடைந்துள்ளதாகவும், அதில் இருவர் போலிஸார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் மையமாக கருதப்படுகின்ற அந்த விடுதி, புலம்பெயர்ந்த மக்கள், இராஜ்ஜிய அதிகாரிகள், மற்றும் மத்திய தரவர்க்க மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும்.
வங்கதேசத்தில் பெரும் துப்பாக்கி சூட்டு மோதல்கள் மிக அபூர்வமாகும்.