முன்னாள் அணித் தலைவர்கள் மீது #தில்ஷான் குற்றச்சாட்டு



இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்ட போது ஏஞ்சலோ மாத்யுஸ், மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் தனக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்கவில்லை ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் திலகரத்ன தில்ஷான் தெரிவித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து நேற்று ஓய்வு பெற்ற திலகரத்ன தில்ஷான் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
ஒய்வு பெற்றதற்கான காரணங்களை அறிவித்த திலகரத்ன தில்ஷான், புதிய வீரர்களுக்கு அவகாசம் வழங்கவே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.


அடுத்த ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால், தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபடுவதில் எந்தவிதமான பயனும் இல்லை என்று கூறிய தில்ஷான், இந்நேரத்தில் புதிய வீரர் ஒருவர் பயிற்சி எடுக்கும் அவகாசத்தை வழங்க தான் தீர்மானித்ததாக அறிவித்தார்.மேலும் சில ஆண்டுகள் விளையாடக்கூடிய திறமை இருக்கின்ற போதிலும் அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்குபெற புதிய வீரர் ஒருவருக்கு அவகாசம் பெற்றுக்கொடுப்பது அவசியமென்று அவர் கூறினார்.
மேலும் கருத்துக்களை தெரிவித்த தில்ஷான் அரசியலில் பிரவேசிக்க தனக்கு எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என்று தெரிவித்தார்.தனது குடும்பத்தினரோடு கூடுதலான நேரத்தை செலவிடுவதற்காகவே தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற தீர்மானித்தாக கூறிய திலகரத்ன தில்ஷான், அரசியலில் பிரவேசித்து மீண்டும் மன அமைதியை பறிகொடுக்க தான் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.#ThilakrathnaDilshan