#அவுஸ்திரேலியா: முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி



ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற மேலவையில் குடியேற்றங்களுகெதிரான ஒரே தேசம் என்ற கட்சி நான்கு இடங்களை வென்றுள்ளது.
பவுலின் ஹான்சன் என்பவர் தலைமைதாங்கும் இந்த கட்சி, இஸ்லாமியர்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், மசூதிகள் கட்டுவதை இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருகிறது.
அவர் ஆஸ்திரேலியா ''ஆசியர்களால் நிரப்பப்படுகிறது'' என்றார்.
ஆனால், பவுலின் ஹான்சன் வருகை, ஆஸ்திரேலிய அரசியலில் வரவேற்கத்தக்கதல்ல என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் விமர்சித்துள்ளார்.