(சுஹைப் உமறுலெப்பை)
காபட் வீதியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது அக்கரைப்பற்று - சாகாம வீதி.
★★★★★★★★★★★★★★
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் Anuradapuram Sun Construction கம்பனியினால் மிகவும் துரித கதியில் அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி பாலத்தடியிலிருந்து ஆரம்பித்த காபட் வீதி 2016.08.03 ஆம் திகதி புதன் கிழமை அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரச் சந்தியை வந்தடைந்துள்ளது.
தற்போது இதன் இரண்டாம் கட்டமாக பராமரிப்புத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து எதுவித மாற்றங்களும் நிகழாத வகையில் 2 கிலோ மீற்றர் காபட் வீதியாக கோளாவிலைச் சென்றடையும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன் மூலம் ஆலையடிவேம்பு, கோளாவில், பனங்காட்டு தமிழ் பிரதேச தமிழ் மக்களும் வீதி அபிவிருத்தியை நேரடியாக பயன்படுத்தும் வகையிலும், இவ்வபிவிருத்தித்திட்டம் தற்போது இடம் பெற்று வருகின்றது.
இவ்வபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நேரடியாக அக்கரைப்பற்று மாநகர சபையும், அக்கரைப்பற்று பிரதே சபையும், ஆலைவேம்பு பிரதேச சபை பிரதேசங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

