(சுஹைப் உமறுலெப்பை)
அக்கரைப்பற்று மாநகரிலே மர்ஹூம் அலி உதுமான் அவர்களின் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.
★★★★★★★★★★★★★★
★★★★★★★★★★★★★★
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினரும், வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இறையடி சேர்ந்த மர்ஹும் அலி உதுமான் Sir அவர்களின் ஞாபகார்த்தமாக 2016.08.05 ஆம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப.5.15 Pm அளவில் அக்கரைப்பற்று மாநகர பொது விளையாட்டு மைதானத்தில் அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டு கழகத்திற்கும், அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையிலான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வினை பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ.ஹாபிஸ் அல்-ஹாஜ்.அப்துல்லாஹ் திருமலை மாவட்ட நீதிபதி அவர்களும், கௌரவ.கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஜனாப்.A.L.தவம் அவர்களும் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஜனாப்.A.L.லத்தீப் அவர்களும், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஜனாப்.A.S.M.அஸ்மி அவர்களும், அக்கரைப்பற்று முன்னாள் தேசிய பாடசாலையின் அதிபர்.ஜனாப்.அஸீஸ் Sir அவர்களும், சட்டத்தரணிகளான சமீம், உவைசுர் ரஹ்மான் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று மண்ணை பேங்கொக்கில் 1980 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் சார்பில் 02 மாணவர்கள் 09 ஆவது ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டக் குழுவில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடி, பிறந்த அக்கரைப்பற்று நம்மண்ணையும், எம் நாட்டையும் அலங்கரித்த ஜனாப்.A.G.அன்வர் Sir தற்போதைய முனவ்வறா கனிஷ்ட கல்லூரியின் அதிபர் அவர்களும், ஜனாப்.M.A.நவாஸ் ASP பொலிஸ் தலைமைக் காரியாலயம் அவர்களையும் நினைவு கூர்ந்து கௌரவித்தனர்.
இவ்வுதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில் அக்கரைப்பற்று ஏஸ் விளையாட்டுக் கழகம் 03 கோள்களையும், அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் 01 கோளையும் புகுத்திய நிலையில் அக்கரைப்பற்று ஏஸ் கழகம் 02 கோள்களால் வெற்றி வாகை சூடிக் கொண்டது.


