அடுத்த வாரத்திற்குள் பரந்தளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரச கால்நடை வைத்தியர் சங்கம் கூறியுள்ளது.
பல வருடங்களாக தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காததன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
அதன்படி எதிர்வரும் 09 மற்றும் 10ம் திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட பேவாதாக அரச கால்நடை வைத்தியர் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ. சீலநாத கூறினார்.

