நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி கமத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய சகல கடமைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் கொள்கையின் அடிப்படையில் கடப்பாட்டை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகாவலி மகா விவசாயி, சிறந்த மகாவலி விவசாய அமைப்புக்கான பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் எம்பிலிப்பிட்டி புத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி கமத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய சகல கடமைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் கொள்கையின் அடிப்படையில் கடப்பாட்டை கொண்டுள்ளது.
வறுமை மற்றும் கடனில் இருந்து விவசாயிகளை விடுவித்து அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்காக அனைவரும் கூட்டாக ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டளவில் தேசிய அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்காக நான்காண்டு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்காக மகாவலி விவசாயிகளை ஊக்குவித்தல், நச்சுத்தன்மையற்ற தரமான உற்பத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்காக விவசாயிகள் மத்தியில் மனோபாவ ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மகாவலி அதிகார சபையினால் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

