துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை



பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் பிரதிவாதிகளான துமிந்த சில்வா மற்றும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த உத்தரவிற்கமைய வழக்கின் 1 ஆம், 3 ஆம், 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் இலக்க பிரதிவாதிகளுகு இன்று மரண தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அனுர துஷார டிமெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படுகின்ற சமிந்த ரவி ஜயநாத், சரத் பண்டார, பிரியந்த ஜனக பண்டார ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய நீதாய விளக்க முறையில்( ட்ரயல் அட்பார்) நீதிபதிகள் குழாமில் இரு நீதிபதிகள் இத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.