கல்கந்த பகுதி தீ கட்டுக்குள்





(க.கிஷாந்தன்)

தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தியத்தலாவ – கல்கந்த பிரதேசத்தில் விசேட பொலிஸ் அதிரடி படையினரின் முகாமிற்கு அருகில் உள்ள மலைதொடரில்நேற்றிரவு இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீயினால் சுமார் 02 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தியத்தலாவ பொலிஸாரும், விசேட பொலிஸ் அதிரடி படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.