(க.கிஷாந்தன்)
இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நுவரெலியா ஹாவெலிய ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்தில் தெய்வீகக் கிராம நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இதில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2015ம் ஆண்டு அறநெறி பாடத்தை கல்வி கற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு மேற்படி தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்காக, ஆலயம் ஒன்றுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 25 ஆலயங்களுக்கும் காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், இந்து சமயகலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. உமா மகேஷ்வரன், உதவி பணிப்பாளர் திருமதி. ஹேமலோஜினி குமரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் இராஜாராம் மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பிரமுகர்கள், ஆலய குருக்கள்மார்கள், அறநெறி மாணவர்கள், ஆசிரியர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

