இந்த 'குயில்' இனி பாடாது: ஓய்வை அறிவித்தார் எஸ். ஜானகி



தமிழ் திரை உலகின் பழம்பெரும் மூத்த பாடகியான எஸ்.ஜானகி இன்றோடு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.''இத்தனை வருடங்கள் நிறைய பாடல்கள் பாடியாச்சு. இனிமே பாட வேண்டாம்னு நிறுத்திட்டேன். ரொம்ப திருப்தியாக ஓய்வு பெறுகிறேன்'' என்கிறார்.

பிரபல பின்னணி பாடகி ஜானகி கடைசியாக ஒரு மலையாள தாலாட்டுப் பாடலுடன் தனது சுமார் 60 ஆண்டு காலை இசைப்பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகி ஜானகிக்கு 78 வயதானாலும் அவரது குரல் இன்னும் இளமையாக உள்ளது. அவரது தாலாட்டுப் பாடல்களை கேட்டால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு கூட தூக்கம் வரும். அப்படிப்பட்ட தேன் குரல் அவருடையது.


எஸ். ஜானகி (பிறப்பு: ஏப்ரல் 231938இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி. இவர் தமிழ்தெலுங்கு,கன்னடம்மலையாளம்இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர்.
ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்குஇடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கினிதுளு,சௌராஷ்டிரம்இந்திவங்காளம்சமஸ்கிருதம்சிங்களம்ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்காணக்கான பாடல்களைப் பாடினார்.[1]
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்த போது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.[2][3]

குடும்பம்

இவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[4][5]

2010களில்

ஜானகி சிறிய கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாடல்கள் பாடியுள்ளார்.2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரிதிரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் அம்மா அம்மா ௭ன்ற பாடலைப் பாடியிருக்கிறார்.மேலும் இவர் பேபி, திருநாள் மற்றும் புதிய ஆகிய திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.திருநாள் திரைப்படத்தில் தந்தையும் யாரோ தாயாரும் யாரோ பாடலைப் பாடியுள்ளார்.

விருதுகள்

விருதுகள்
விருதுகள்வெற்றிகள்
தேசிய விருதுகள்
4
கேரள மாநில அரசு திரைப்பட விருதுகள்
11
நந்தி விருதுகள்
10
தமிழக திரைப்பட விருதுகள்
6
ஒடிசா மாநில திரைப்பட விருதுகள்
1
மொத்தம்
32
  • 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
  • 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
  • நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
  • 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
  • பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
  • ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
  • பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

பத்மபூஷண் விருது மறுப்பு

௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.[6][7]

தேசிய விருதுகள்

நான்கு தடவைகள் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதுகள் கிடைத்தன.
  1. 1976பதினாறு வயதினிலே படத்தில் செந்தூரப் பூவே பாடல்
  2. 1980ஒப்போல் மலையாளத் திரைப்படத்தில் எட்டுமனூரம்பழத்தில் பாடல்
  3. 1984சித்தாரா தெலுங்குப் படத்தில் வென்னெல்லோ கோடாரி அந்தம் பாடல்
  4. 1992தேவர் மகன் படத்தில், இஞ்சி இடுப்பழகா பாடல்[8][9]