அக்கரைப்பற்று வடக்குப் பக்க நீர்க்குழாய் பொருத்துதல்



(சுஹைப்)

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் வடக்குப் பக்கம் உள்ள MCC North வீதிக்கான நீர்க்குழாய் பதிக்கும் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
★★★★★★★★★★★

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் வடக்குப் பக்கம் உள்ள MCC North வீதியில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அவர்களுக்கான நீரிணைப்பு வசதியை ஏற்படுத்தித்
தருமாறு கடந்த பல வருடங்களாக இணைப்பாளர் ஜனாப்.அல்-ஹாஜ்.A.L.மர்ஜுன் அவர்களிடம் தொடர்ச்சியான கோரிக்கையினை கௌரவ நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அமைச்சர் ஜனாப்.அல்-ஹாஜ்.றஊப் ஹக்கீம் அவர்களிடம் நேடியாக தெரிவித்ததை அடுத்து, அப்பிரதேச மக்களுக்கு உடனடியாக நீரிணைப்பு வேலைகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அமைச்சர் பணித்தார்.

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் MCC North Road இற்கான நிலத்தின் கீழ் நீர்க் குழாய் பதிப்பதற்கான ஆரம்ப வேலைகளை இணைப்பாளர் ஜனாப்.அல்-ஹாஜ்.A.L.மர்ஜுன் அவர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்றுக்கான நிலையப் பொறுப்பதிகாரியான ஜனாப்.M.C.றமீஸ் அவர்களின் முன்னிலையில் சுபவேளையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.