இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஹராரே நகரில் இன்று (29) சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் சந்திமால் காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற முடியாத நிலையில் குறித்த போட்டியில் இலங்கை அணியின் புதிய தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுகின்றார்.
சிம்பாபே அணி மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ள 15 டெஸ்ட் போட்டிகளில் அனைத்து போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் ரங்கன ஹேரத், டி சில்வா, டிக்வெல்ல, குணரத்ன, சுரங்க லக்மால், மது சனகா, M.D.K பெரேரா, குஷால் ஜனித் பெரேரா, சந்தகன், கௌஷால் சில்வா போன்ற வீரர்கள் இலங்கை அணி 15 பேர் குழாமில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

