மலையகத்தில் தீபாவளி பண்டிகை



(க.கிஷாந்தன்)

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை 29.10.2016 அன்று சனிக்கிழமை வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி  ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.